திங்கள், 11 ஏப்ரல், 2011

யாருக்கு வாக்களிக்கலாம் ?

நாளை தேர்தல் யாருக்கு வாக்களிக்கலாம் ? 
இன்று இதைவிட கடினமான ஒரு கேள்வி கிடையாது. ஸ்பெக்ட்ரம் ஊழல், குடும்ப அரசியல் என்று அதிருப்திக்குள்ளான இன்றைய தமிழக அரசை எதிர்த்து போட்டியிடுவது ஒன்றும் காமராஜரோ, கக்கனோ, அண்ணாவோ இல்லை இவர்கள் இன்று செய்ததை நாளை செய்ய காத்திருப்பவர்கள், தி.மு.க செய்ததிலேயே மிகப்பெரிய துரோகம் ஈழ தமிழின அழிப்புதான், ஆனால் நாளை அ.தி.மு.க ஆட்சிக்கு வந்து காங்கிரஸ் கூட்டணியும் கிடைத்துவிட்டால் இதைதான் கொஞ்சமும் தயக்கமின்றி அவர்களும் செய்வார்கள். இவர்களுக்கு மாற்றாக ஊழலில்லாத நேர்மையான் ஆட்சி தருவேன் என்று கூறி கட்சி தொடங்கிய விஜயகாந்த் நம்பிக்கையளித்தார். டாஸ்மாக் கடையை பார்த்தாலே இவரது பிரசார வண்டி ஓரங்கட்டிவிடுகிறது. தனது வேட்பாளரை தானே அடிக்கும் ஒரு காட்சியை உலகில் வேறெங்கும் நாம் பார்க்க முடியாது. NDTV யின் பிரணாய் ராய் " தமிழகத்தில் இதைபோல கூட நடக்குமா" என்று கூறினார். 
தி.மு.கவிற்கு மீண்டும் வாக்களிப்பது என்பது தமிழ்நாட்டின் மானத்தை பலிகொடுத்த ஸ்பெக்ட்ரம் ஊழல், அராஜக அரசியல், இன துரோகம் இவை எதுவுமே  தவறில்லை என்றாகிவிடும்.

பின்னர் யாருக்கு வாக்களிப்பது? உங்கள் தொகுதியில் நிற்கும் வேட்பாளர்கள்  பற்றி முதலில் தெரிந்து கொண்டு கட்சி பாகுபாடின்றி வாக்களியுங்கள்.

ஆனால் காங்கிரசிற்கு விழும் ஒவ்வொரு வாக்கும் ஒரு இனத்தை அழித்தவர்கள் கழுத்தில் விழும் பூமாலை என்பதை மட்டும் மறவாதீர்கள்!!!.

ஏன் காங்கிரசிற்கு வாக்களிக்க கூடாது? இந்த வீடியோவை ஒருமுறை முழுமையாக பாருங்கள்.


ஞாயிறு, 19 டிசம்பர், 2010

ஈசன் - ஒரு பார்வை

தமிழ் சினிமாவின் நம்பிகைதரும் இளம் இயக்குனர்களில் ஒருவரான சசி இயக்கியிருக்கும் படம் என்பதால் நீண்ட நாட்களாக நான்  எபொழுது ரிலீஸ் ஆகும் என எதிர்பார்த்திருந்தேன்.
இவர் முன்னர் இயகிருந்த சுப்ரமணியபுரம் '80' களில் வாழ்ந்த இளைஞர்களின் வாழ்க்கையை அப்படியே படம் பிடித்து காட்டியது. '80' களில் வெளிவந்த படங்களில் கூட அந்த அளவிற்கு எதார்த்தத்தை காட்டியதில்லை என்றே நினைக்கிறன். எனவே இந்த படத்தில் என்ன செய்திருகின்றார் என்ற எதிர்பார்ப்பு நமக்கு எழுவது இயல்பே. படத்தின் டைட்டில் போட்ட விதமே  நம் ஆவலை அதிகப்படுத்தியது. பப்பில்   இன்றைய நகர இளஞர்களின் குடி ஆட்டம் பாட்டத்துடன் தொடங்கும் படம், பப்பில் இருந்து ஒரு பெண்ணை சேசிங் செய்யும் இளைஞர்கள் அதனை தொடர்ந்து விபத்து என சுவாரசியமாக
தொடங்கியது. ஆனால் சற்று நேரத்திலேயே திரைக்கதையும் போதை தலைக்கு ஏறியது போல் மந்தமாகி விடுகிறது. படத்தின் முதல் பாதி முழுவதும் படத்தின் கதையை இயக்குனர் தெளிவுபடுத்தவே இல்லை அவ்வளவு குழப்பம். அரசியல்வாதி மற்றும் அதிகாரிகளுக்கு idaiyilaana  காட்சிகள் மட்டும் முன்பாதியில் ரசிக்கும் படியாக உள்ளது. அதிலும்
நமோ நாராயணின் (நாடோடிகள் படத்தில் பந்தா அரசியல்வாதியாக வருபவர்)
கதாபத்திரம் மிகவும் எதரர்த்தமகவும் ரசிக்கும் படியாகவும் உள்ளது. இதுவரை நாம் பார்த்திராத மிகவும் இயல்பான போலீஸ் அதிகாரியாக அசத்தியிருகின்றார்  சமுத்ரகனி. படத்தின் முக்கிய கதபாதிரங்கலான வைபவ், அபர்ணா இருவரும் பப்பில் குடித்துகொண்டே இருகின்றனர்.நம் பசங்க எவளவோ ஹைடெக்கா  சுற்றினாலும் கல்யாணம் என்றுவரும்போது நிச்சயம் பப்பில் பெண் பார்கமாட்டர்கள். இவர்கள் காதல் முழுவதும் செயற்கையாகவும், கதைக்கு சம்பந்தம் இல்லாமலும் உள்ளது.  படத்தின் வசனங்களிலும், கதாபாத்திரங்களின் நடிப்பிலும் சசி தெரிகிறார். குறிப்பாக அரசியல்வாதியாக வரும் எ.ல்.அழகப்பன் தன் மகனிடம் "என்னுடைய சொத்து எல்லாம்
உனக்குதான். என்னுடைய பதவி உனக்கு கிடைகனுனா வேஷ்டிய எடுத்து கட்டு நாலு கல்யாணத்துக்கு போ. அப்பதான் நாலு போஸ்டர் அடிச்சி ஓட்டுவான்." என வாரிசு அரசியல் எப்படி உருவாகிறது என்பதை நச் என்று சொல்லியிருகிறார். இப்படி படம் முழுவதும் அட போட வைக்கும் காட்சிகளும் உள்ளது. விபசார ரைடுக்கு போகும் இடத்தில ஆணை விட்டுவிட்டு பெண்ணை மட்டும் படம் எடுக்கும் போலீஸ் காரர்,
அந்த வீட்டிலிருக்கும்  IAS அதிகாரி என வக்கிரம் பிடித்த அதிகாரிகளை படம் பிடித்து காட்டுகிறார். இரண்டாம் பாதியில் ஒருவழியாக கதைக்கு வருகின்றனர் நாங்க எப்படியெல்லாம் இருந்தோம் தெரியுமா என தொடங்கும்  ப்ளாஷ் பேக் ஒரு பாடல் வைப்பதற்கும்  ஈசன் குடும்பத்தின் (முக்கிய கதாபாத்திரம்) குலதெய்வம் செங்கையா என கான்பிபதற்கும் மட்டுமே பயன் படுகிறது. மற்றபடி இது வரை நாம் பார்த்து பழக்கப்பட்ட
"ஒரே ஒரு  கிராமத்தில் ஒரு அழகான குடும்பம் கதைதான்". கிராமத்திலிருந்து நகரத்திற்கு வரும் அபிநயா உடனே மது அருந்தும்வரை பழகிக்கொள்ளும் காட்சிகள் சற்று ஓவராக உள்ளது. பலாத்காரம் செய்யப்பட்ட பெண் மற்றும் அந்த குடும்பத்தின் வலியை காட்டும் கட்சிகளில் இயக்குனர் நம்மை நெகிழ வைக்கிறார். ஜில்லா விட்டு பாடல் காட்சியமைப்பு மற்றும் இசை நம்மை ரசிக்க வைக்கிறது. SR கதிரின் ஒளிப்பதிவு சில இடங்களில் மட்டுமே ரசிக்கும் படி உள்ளது. ஜேம்ஸின் பாடல்கள் நன்றாக இருந்தாலும் பின்னணி இசை படத்தில் ஒன்றவில்லை.பின் பாதியில்  ஈசனாக வரும் துஷ்யந்தின் நடிப்பு அருமை( நல்லா வருவீங்க தம்பி).இன்றைய டெக்னாலஜி யின் வளர்ச்சியால் 15 வயது சிறுவன் நினைத்தாலும் தொடர் கொலைகள் செய்யலாம் என்ற காட்சிகள் நம்மை அதிர்ச்சி ஊட்டுகின்றன. நகரத்தில்  காலேஜ் படிக்கும் ஆண் பெண் இருவரும் பப்பில் குடிப்பதும் வேலைக்கு போகும் பெண் வீட்டில் ஒரு மாதிரியாகவும் வெளியில் ஒரு மாதிரியாகவும் நடந்து கொள்ளுவதும் எந்த அளவிற்கு உண்மை என்று அந்த ஈசனுக்கே வெளிச்சம். இருந்தாலும் நீலாங்கரை பகுதிகளில் பப்களில் நடக்கும் பிரைவட் பார்ட்டி கூத்துகளும். சட்ட விரோத செயல்களும் நாம் காணும் நிதர்சனமான உண்மை.

சசி மீண்டும் ஒரு காவியத்துடன் வருவீர்கள் என காத்திருக்கிறோம்.

ஈசன் - அழிக்கின்றான் எதிரிகளை மட்டுமல்ல நம் எதிர்பார்ப்பையும் தான்.

செவ்வாய், 7 டிசம்பர், 2010

முதல் தென்றல்

அனைவருக்கும் எனது முதல் வணக்கம்.
இன்று முதல் எனது பதிவை தொடங்குகிறேன் . குறை இருந்தால் கூறுங்கள்.


                                                                            அன்புடன்
                                                                         சாத்தையன்.G